நாகவ கரணம்
நாகபத்தில் பிறந்தவர்கள் அடிக்கடி நோயின் பிணிக்கு உள்ளார்கள் ஆத்திரக்காரகன், உணர்ச்சியால் முன்கோபம், பெண் பித்தன், தெளிவற்ற புத்தி உள்ளவன். சிறந்த உணவு வகைகளை உண்பான். துன்பத்தை எதிர்த்து விழுபவர்கள். உத்தம குணம் கொண்டவர். இவருக்குரிய ஊர்வலம் பாம்பு.
இவர்களின் கருநாதன் ராகு ஆவார். நாகவ கரணத்தில் பிறந்தவர்கள் பல்வேறு தொழில் செய்து பொருள் ஈட்டுவார் தொழில் நுட்ப அறிவு, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் தொடர்புடைய தொழில்கள், துப்புரியும் முகவர், ஸ்கேன் சென்டர், மதுபான கடை, உரம் தயாரிக்கும் நிறுவனம்,
விமானத்துறை, வேதியல் ரசாயனங்கள், மருந்து தயாரித்தல், கமிஷன் வியாபாரம் ஆகியவற்றில் ஈடுபட்டால் நல்ல லாபம் பெறலாம்.
வழிபட வேண்டிய தெய்வங்கள்- பரிகாரங்கள்:
சர்ப வாகனம் கொண்ட அனைத்து தெய்வங்கள், நாகாத்தம்மன், திருவேங்காடு கருமாரி, திருமால், நாகர்கோவிலில் உள்ள நாகராஜா, பல்வேறு மதத்தினருக்கு ஈமச்சடங்கிற்கு தங்களால் முடிந்த அளவு உதவுதல் நன்று.