திதிகள்
திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின் படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்குலபட்சம் அல்லது வளர்பிறை ஆகும்.
துவிதியை திதியில் பிறந்தவா்கள்
பலன்கள்:
துவிதியை தி தியில் பிறந்தவர்கள் வாய்மை தவறாதவர்களாகவும், தன்னுடைய இனத்தவர்களை இரட்சிப்பவர்களாகவும், எவ்வித முயற்சியிலும் பொருள் தேடி வாழ்பவர்களாகவும் இருப்பார்கள்.
துவிதியை திதி இது ப்ரம்மாவுக்கு உரிய நாள் இன்று கட்டிடம் கட்டுவதா்கான அஸ்திவாரம் அமைத்தல் மற்றும் நிலைத்தன்மை கொண்டவை உருவாக்குதல் நன்மை தரும்.
திதிகளில் வளர்பிறை துவிதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரையோதசி, ஆகியவை விசேஷமானவை.
தேய்பிறையில் துவிதியை, திருதியை, பஞ்சமி, மூன்றும் சிறப்பான சுப திரிகள் ஆகும். சுப காரியங்களில் ஈடுபடலாம்.