திதிகள்
திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின் படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்குலபட்சம் அல்லது வளர்பிறை ஆகும்.
திரிதியை தியில் பிறந்தவா்கள்
பலன்கள்:
திரிதியை திதியில் பிறந்தவா்கள் நற்குணமுடையவர்களாகவும், சுத்த முடையவர்களாகவும், பிரபு என்று புகழ் பெறுபவா்களாகவும், பலசாலியாகவும், தேவாலயங்களைத் தேடித்தேடி தருமம் செய்பவா்களாகவும் இருப்பாா்கள்.
திரிதியைதிதி கெளரிமாதாவுக்கு உகந்த நாள். சிகை திருத்தம் செய்தல், முகசவரம், நகம் வெட்டுதல் முதலியன நன்மை தரும்.
திதிகளில் வளர்பிறை துவிதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரையோதசி, ஆகியவை விசேஷமானவை.
தேய்பிறையில் துவிதியை, திருதியை, பஞ்சமி, மூன்றும் சிறப்பான சுப திரிகள் ஆகும். சுப காரியங்களில் ஈடுபடலாம்.