P.K.கணேஷ் ஜோதிடநிலையம். பொியகுளம்ரோடு,தேனி−625531
கடகம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்
கற்பனை சக்தியில் சிறந்துவிளங்கிக் கலைஞர்களாகத் திகழும் கடகராசி அன்பர்கள், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஆளுமை மிக்கவர்கள். இவர்கள் நினைத்ததை அடையும்வரை சோர்ந்துபோகமாட்டார்கள். எத்தனை தடை வந்தாலும் அதைத் தாண்டிக்குதித்து வெற்றி இலக்கை எட்டுவார்கள். நட்சத்திர மண்டலத்தில் புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய கடக ராசியில் வரும். இப்படிப்பட்ட ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படி அமையும் என்பதைக் காண்போம்.
குருபகவான் இதுவரை உங்கள் உத்தியோகஸ்தானத்தில் அமர்ந்து எதையும் சரியாகச் செய்ய விடாமல் தொல்லை செய்துகொண்டிருந்தார். மேலும் அஷ்டம சனியால் ஏகப்பட்ட பிரச்னைகள்யும் சந்தித்துக் கொண்டிருந்தார்கள். தொட்ட செயல்களில் எல்லாம் தோல்வி, விரக்தி சூழ்ந்துகொண்டிருந்தது. மே 1 -ம் தேதி முதல் அவர் உங்களின் லாப வீட்டில் வந்தமர்கிறார். பதினொன்றில் அமரும் கிரகம் அற்புதமான பலன்களைக் கொடுக்கும். அதிலும் குருபகவான் பூரண சுபர். அவர் உங்கள் கஷ்டங்களில் இருந்து விடுவித்து சுதந்திரமாக சுவாசிக்கச் செய்யப்போகிறார்.
பணவரவில் இருந்த தடை நீங்கும். பொன் பொருள் சேரும். தடைப்பட்ட சுபகாரியங்கள் குடும்பத்தில் ஏற்பாடாகும். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்காலத்துக்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள். இதுவரை கண்டும் காணாமல் போனவர்கள் தேடிவந்து பேசுவார்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். ஊர் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். அதற்குரிய மரியாதையும் கிடைக்கும்.
உங்கள் ராசிக்கு 3 -ம் இடமான கன்னியை குருபகவான் பார்ப்பதால் சகோதர வகையில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீட்டில் புதிய எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் வாங்குவீர்கள்.
ராசிக்கு 5 ம் இடமான விருச்சிகராசியை குருபகவான் பார்ப்பதால் பிள்ளைகள் இனி நீங்கள் சொல்வதைக் கேட்பார்கள். அவர்கள் மூலம் பெருமை உண்டு. அவர்களின் கல்வி திருமண முயற்சிகள் பலன்தரும். பூர்விகச் சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்.
ராசிக்கு 7 -ம் வீடான மகரத்தை குருபகவான் பார்ப்பதால் இனி உற்சாகமாக இருப்பீர்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்னைகள் விலகும். பணவரவும் உண்டு.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
1.5.24 முதல் 12.6.24 வரை உங்களின் தனாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் திடீர் பணவரவு உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். சமாளிக்க முடியாத பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். வழக்கில் வெற்றியுண்டு. கண் வலி குறையும். தந்தை வழி உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். சிலருக்கு அரசு வேலை கிடைக்கும்.
12.6.2024 முதல் 19.8.2024 வரை மற்றும் 2.12.2024 முதல் 5.4.2025 வரை உங்கள் ராசிநாதனான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் பிரபலமாவீர்கள். வருமானம் உயரும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். சொந்த பந்தங்களின் வருகையால் வீடு களைகட்டும். குலதெய்வப் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அடிக்கடிப் பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வி.ஐ.பி வீட்டு விசேஷங்களில் முதல் மரியாதை கிட்டும். வீடு, மனை அமையும்.
19.8.24 முதல் 2.12.24 வரை மற்றும் 5.4.25 முதல் 14.5.25 வரை உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் நினைத்த காரியங்களை முடிப்பீர்கள். உங்களின் அந்தஸ்து உயரும். பணப்புழக்கம் அதிகரிப்பால் வருங்காலத்திற்காகச் சேமிப்பீர்கள். சொத்துப் பிரச்னை சுமுகமாகும். தள்ளிப் போன வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிள்ளை பாக்கியம் உண்டு. பிள்ளைகளால் புகழடைவீர்கள்.
வியாபாரம்
தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத்தீரும். புதிய முதலீடுகள் செய்வீர்கள். இடவசதியில்லாமல் தவித்தீர்களே! கடையை விசாலமான இடத்திற்கு மாற்றுவீர்கள். வேலையாட்களின் தொந்தரவு குறையும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களைக் கவரப் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உணவு, இரும்பு, புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் மறையும்.
உத்தியோகம்
உங்களை உருகுலைய வைத்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். தள்ளிப் போன பதவியுயர்வு, சம்பள உயர்வு இனி தடையில்லாமல் கிடைக்கும். மூத்த அதிகாரியிடமிருந்து அலுவலக ரகசியங்களை அறிந்து கொள்வீர்கள். வேலைச்சுமை குறையும். தலைமைப் பொறுப்பு தேடி வரும். வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து அதிக சம்பளத்துடன் கூடிய அழைப்பு வரும். கலைஞர்களே! வீண் வதந்திகள், கிசுகிசுக்கள் என மன உளைச்சலுக்கு ஆளானீர்களே! இனி துளிர்த்தெழுவீர்கள். புது வாய்ப்புகள் தேடி வரும்.
இந்த குரு மாற்றம் சிக்கல்களிலிருந்து உங்களை விடுவிப்பதுடன், திடீர் வளர்ச்சியையும், வெற்றியையும் தருவதாக அமையும்.
Dive into the wonders of the cosmos with PKG Astro, your gateway to the stars. Join us on a journey through space and time, where every discovery expands our horizons and brings the mysteries of the universe closer to home.
"If you're navigating the complexities of the cosmos and find yourself in need of guidance, we're here to illuminate your path. Our team of experts at PKG Astro is dedicated to assisting you with any questions or challenges you might encounter on your astronomical journey. Reach out to us, and let's explore the universe together. Your exploration, our expertise—unlocking the mysteries of the cosmos has never been more achievable."
P.K.Ganesh Astrology. KB Astrology & Research Centre. East Market, Behind Telephone Exchange, Periyakulam Road,Theni−625531.
Copyright © 2024 P.K.G Astro | All Rights Reserved. Powered By Sanishsoft

