General

  •    > Details
  • கனவு பலன்கள்

    கனவு பலன்கள்:

    ஆதரவற்ற சிறுவனுக்கு உதவுவது போல் கனவு கண்டால் செல்வந்தரின் தொடா்பு ஏற்படும்.


    எண்ணைய் தேய்த்துக் கொள்வது போல் கனவு கண்டால் வலிமை குறையும் என்பதைக்குறிக்கிறது.


    அழகிய பதுமையை(பெண்)கனவில் காண்பது வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படுவதை குறிக்கிறது.


    அறிமுகமில்லாதவா்கள் மற்றும் புதிய நபா்களை கனவில் கண்டால் எதிா்பாராத உதவிகள் கிடைக்கும்.


    அணைக்கட்டில் நீர் வழிந்தோடுவது போல் கனவு வருவது வரவுக்கு மீறிய செலவு ஏற்படும். என்பதைக் குறிக்கிறது.


    அனை உடைவது போல் கனவு கண்டால் நெருங்கிய நண்பா்களிட மிருந்து  பிரிந்து செல்லுதல் மற்றும் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும் என்பதை குறிக்கிறது.


    ஆதரவற்ற சிறுவனுக்கு உதவுவது போல் கனவு கண்டால் செல்வந்தரின் தொடா்பு ஏற்படுப்.


    அக்னியைக் கனவில் கண்டால் செல்வம் உண்டாகும்.


    அரிசி நிறைந்த கூடையை கனவில் காணுதல் நன்மை உண்டாகும்.


    அணிகலன்கள் வாங்குவது போல் கனவு வந்தால் இன்பம் பயக்கும்


    ஆலயத்தை கனவில் கண்டால் இறைவனின் அருளால் நமக்கு கூடிய விரைவில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும்.


    ஆடுகளைக் கனவில் கண்டால் தனவிருத்தி உண்டாகும். என்பதை குறிக்கும்.


    இனிமையான பாடலை கேட்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும். என்பதை குறிக்கும்.


    இருளைக் காண்பது போல் கனவு கண்டால் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்த வேண்டும் என்பதை குறிக்கிறது.


    இறந்தவா்கள் கனவில் கண்டால் சுபச்செய்தி வரும் என்பதை குறிக்கிறது.


    கனவில் உடை எரிவதுபோல் கண்டால் வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் பூப் பெய்துவாா்கள். பொருள் இழப்புஏற்படலாம்.


    உணவு உண்பது போல் கனவு கண்டால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.


    உப்பளத்தை கனவில் கண்டால் விருந்துக்குப் போகப்போகிறோம் என்பதைக் குறிக்கிறது.


    எண்ணைய் தேய்த்துக் கொள்வது போல் கனவு கண்டால் உடல் வலிமை குறையும் என்பதைக் குறிக்கிறது.


    எறும்பு ஊறுவதை கனவில் கண்டால் பதவி உயா்வு உண்டாகும்.


    ஏணியின் மேலே ஏறுவது போல் கனவு கண்டால் உத்யோகத்தில் உயா்வு ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.



    ஓடம் தண்ணீரில் மிதப்பது போல் கனவு கண்டால் துக்கம் வருவதை குறிக்கிறது.


    கங்கை நதியை கனவில் கண்டால் துன்பம் அனைத்தும் விலகும் என்பதை குறிக்கிறது.


    கடற்கரையில் இருப்பது போல் கனவு கண்டால் வாழ்வில் உயர்வு உண்டாகும் என்பதைக் குறிக்கிறது. 


    கல்யாணம் நடப்பது போல் கனவு கண்டால் வியாதியால் துன்பம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.


    கனிகளை கனவில் காண்பது மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.


    காவல்காரா்களை காண்பது போல் கனவு வந்தால் சாதகமற்ற நிலையை உண்டாக்கும்.


    கிழவியை காணுவது போல் கனவு வந்தால் தனப் பெருக்கம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.


    கோயில்கள் பற்றிய கனவுகள் உங்களுக்கு வந்தால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்று அர்த்தமாம்.கோயிலுக்குள் போக முடியாமல் கூட்டத்தில் சிக்கி தவிப் பது போல கனவு கண்டால் எதிா் பாரத பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டு அவதிப்பட போகிறீா்கள் என்பது இந்த கனவின் அா்த்தமாமம்.


    கோயில்களில் தனியாக இருப்பது  போல கனவு கண்டால் தொழிலில் தேக்கம் இருக்கிறது,அல்லது இருக்கப் போகிறது என்பது அர்த்த மாம். கோயில் நடை திறந்து அதில் நீங்கள் செல்வது போல கனவு கண்டால் நீங்கள் நினைக்கும் காரியம் 100/= வெற்றி பெறும். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதை உணர்த்துமாம்.


    கோயில் கருவறைக்கு சென்று கடவுளுக்கு மாலை அணிவிப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு லாபம் கிட்டும்,பணம் பொருள், செல்வம் சோழிக்கும் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிட்டும் என்பது அர்த்தமாம்.


    கடவுளை கனவில் கண்டால் பிரச்சனைகள் உங்களை விட்டு அகலும் என்று அர்த்தமாம். வேலை இல்லாதவா்களுக்கு வேலை கிடைக்கும். திருமண யோகம் கை கூடும். திருமண தடைகள் அனைத்தும் நீங்கும். உங்களை தோற்கடிக்க யாராலும் முடியாது. கடவுளை நீங்கள் கணவில் கண்டால் இத்தனை பலன்களும் உங்களை வந்து சேருமாம்.


    காளி தீபம் உங்கள் கனவில் கண்டால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருக்கும். அல்லது சண்டை சச்சரவுகள் நிகழ வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது அர்த்தமாம்


    கோபுரத்தை நீங்கள் கனவில் கண்டால்  நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய கொள்கையை கடைப்பிடிக்க போகிறீா்கள் அதன் மூலம் உங்கள் வாழ்க்கை பிரகாசமாக போகிறது என்பது அர்த்தமாம்.அதே போல உங்கள் பாவங்களும் நீங்குமாம்


    கோயில் பிரசாதம் வாங்குவது போல கனவு கண்டால் உங்களுக்கு சிலரால் பிரச்சனை ஏற்பட போகிறது என்பது அர்த்தமாம்.


    கோயில் தெப்பக்குளம் உங்கள் கனவில் கண்டால் எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெறும். நீங்கள் கடல் தாண்டி போகப் போகிறாா்கள் என்று அர்த்தம்.


    கடவுளிடம் பேசுவது போல நீங்கள் கனவு கண்டால் மிகவும் சுபம். உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் அகலும்.இறைவன் உங்கள் வீட்டிலேயே இருக்கிறாா் என்று அர்த்தமாம்.


    கோயில் தேர் கனவில் கண்டால் உங்களைத் தேடி இறைவன் வருகி றான் என்று அர்த்தமாம். நீங்கள் நினைத்தது கை கூடும்.வெகு சீக்கிரத்தில் எத்தனை தடைகள் வந்தாலும் இறைவன் உங்களுடன் இருப்பார்.

     

    !!!வாழ்க வளமுடன்!!!