NUMBERS STRENGTH

  •    > Details
  • 5,14,23- பிறந்தவர்களின் பலன்கள்

    பிறந்ததேதி-5,14,23 பலன்கள்

    5-எண் பிறந்தவர்கள்:

     தேதியில் பிறப்போர் சிறுவயதிலேயே பெரிய லட்சியங்களால் கவரப்படுவார். வசீகரமான குணங்களும், பிறரை மதித்தாலும், எல்லா மேலான குணங்களும் நிரம்பியராக இருப்பார். பிறருக்கு போதிப்பவர் ஆவார். தெய்வீகமான வாழ்க்கை அமைவதுண்டு.


    14-ந் தேதியில் பிறப்பவர்களுக்கு பிரயாணத்தில் சலியாத ஊக்கமும் ஓரளவு பிடிவாதமும் இருக்கும். பொருட்களை சேர்க்கும் அதிர்ஷ்டம் உண்டு ஆகையால் எல்லாவிதமான பெருத்த வியாபாரங்களும் பலிதமாகும். பணப்புழக்கம் அதிகமிருக்கும். எப்பொழுதும் இவர்களைச் சுற்றி ஜனக் கூட்டம் இருக்கும். பிறரை நம்புவதால் பெருத்த நட்டங்கள் ஏற்பட்டு விடும். மழை, இடி, நெருப்பு, வெள்ளம் இவைகளைக் கண்டு விலக வேண்டியது அவசியம். உயிருள்ளவரை  பிறர் உதவி யுண்டு. குன்றாத அதிர்ஷ்டம் அடிக்கும்.


    23-ந் தேதி பிறந்தவர்கள்:

     இத்தேவியில் பிறப்பவர்களே சாதிக்க முடியாதது உலகில் ஒன்றுமே இல்லை. மிக மிஞ்சின ராஜ வசியமும், ஜன வசியமும் இருக்கும். இவர்களை விட மேல் நிலையில் இருப்பவர்களும் இவர்களை புகழ்வர். மேலான பண்பாடுகளும் நல்ல நடத்தையும் அமையப்பெரின் இவர்கள் நல்ல நடத்தையும் அமையப்பெரின் இவர்கள் சரித்திரம் போற்றும் பெரியாராக ஆகி விடுவார்.


     அதிர்ஷ்ட காலம் :

    5,9,14,18,23,27, தேதிகளை மிக்க அதிர்ஷ்டமான தினங்கள்.


     நிறம்: சாம்பல் வர்ணமே மிக்க அதிர்ஷ்டமானது. கருப்பு போன்ற ஆழ்ந்த நிறங்களை ஒரு நாளும் அணியலாகாது.


    இரத்தினம்:

     வைரம், வைரம் தரிக்க முடியாதவர்கள் வைரம் போன்ற ஒளி வீசும் ஜிர்க்கான் கற்களை தரிக்கலாம்.