NUMBERS STRENGTH

  •    > Details
  • 9,18,27,பிறந்தவர்கள் பலன்கள்

    பிறந்ததேதி -9,18,27 பிறந்தவர்கள்

    9-ம் தேதி பிறந்தவர்கள்:

    9ந் தேதியில் பிறப்பவர்கள் செயற்கரிய காரியங்கள் செய்ய ஆர்வம் உடையவர்கள்.நுட்பமான மூளை உடையவர்கள். மேலான லட்சியங்களுடன் வாழ்வதால் வாழ்க்கை வளம் பெறும். எல்லா எதிர்ப்புகளையும் சாமர்த்தியத்தால் வென்று வெற்றியுடன் வாழ்வார்.


    18-ந் தேதி பிறந்தவர்கள் சுயநலத்தை விட்டால் தான் இவர்களுக்கு நன்மை உண்டாகும். அவசரப்பட்டு ஒரு விவகாரத்திலும் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும். எல்லோருடனும் மனக்கசப்பை உண்டு பண்ணக்கூடிய தினமாக யால் இதில் பிறப்பொர் கோபத்தையும் பிடிவாதத்தையும் குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். காதலில் அவசரப்போக்கு தோல்வியை தரும். உணர்ச்சிகள் மனதைத் தீவிரமாக தூண்டிக்கொண்டே இருக்கும்.


    27-ம் தேதி பிறப்பவர்கள்:

     இவர்கள் நற்காரியங்களிலேயே ஈடுபட்டு நல்ல பலன்களை அடைந்து வருவர். யோசனைகள் எல்லாம் வெற்றி பெறும். அறிவே வெற்றி தரும். இவர்கள் சாந்தமானவர்கள். ஆழ்ந்த யோசனைகளும் தளராத உழைப்பையும் உடைய இவர்கள் எல்லா விஷயங்களையும் தீவிரமாக ஆராய்ச்சி செய்வர்.


     அதிர்ஷ்ட காலம் :

    5,14,23,09,18,06,15,24,21,30 தேதிகள் அதிர்ஷ்டம் தருவன.1,10, தேதிகளும் சாதகமானவையே,27 ந் தேதிகளில் நல்ல பலன்கள் நடைபெறும்.


     துரதிஷ்ட தினங்கள்:

    2,11,20,29, தேதிகள் நன்மை அல்ல. 19ம் தேதிகளிலும் சில சமயங்களில் ஒரு தவறான யோசனைகள் மனதில் உதிக்கும். இப்்தினங்கள் குழப்பத்தை உண்டு பண்ணக் கூடிய கூடியவையானதால் இத்தினங்களில் ஒரு முக்கிய காரியத்திலும் ஈடுபட வேண்டாம். 


    நிறம்: இவர்களுக்கேற்ற நிறம் சிவப்பு. கரும் சிவப்பும்  நீலமுங்  கூடப் பொருந்தும். வெளிரான பச்சை மற்ற மென்மை மிகுந்த நிறங்கள் கூடாது. ஆடைகளின் கரையிலாவது செந்நிறம் இருப்பது நலம்.


     ரத்தினம்: ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தந்து சரீர குற்றங்களை பவளம் நீக்கும்.