மிதுனராசி அன்பர்களே! புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது சாதகமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகும். சிலருக்கு வீண் அலைச்சல் ஏற்படவும் அதனால் உடல் அசதி உண்டாகவும் கூடும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். வெளியில் செல்லும்போது தக்க முன்னெச்சரிக்கை அவசியம். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததைப் போலவே இருப்பது மகிழ்ச்சி தரும். விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டில் குடும்பத்துடன் தெய்வவழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.