RASI URUVAM

  •    > Details
  • கடக ராசியின் உருவம்


    ராசிகளின் குணாதிசயங்களை எளிதில் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காக  ஜோதிடத்தில் ராசி உருவங்கள் ஒருவகையான  சங்கேத குறியீடுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக, மேஷ ராசியின் குணாதிசியங்கள் ஆடுகளின் குணாதிசயங்களை ஒத்தி இருக்கும். இதுபோல் அந்தந்த ராசியின் குணாதிசயங்கள் அந்தந்த ராசிக்குரிய உருவத்திற்குள் மறைந்திருக்கிறது.
             
               கடக ராசியின் உருவம்
    கடக ராசியின் உருவம் நண்டு ஆகும்.  நண்டு தாய்மையின் அடையாளமாகும்.  அதாவது நண்டானது எப்பொழுதும் தன் குஞ்சுகளை சுமந்து திரிவதில் அலாதி பிரிய முடியவை. இதன் காரணத்தினால் கடக ராசிக்காரர்கள் தாய்மை உள்ளம் கொண்டவர்கள் என்றும், தன் குடும்பத்தை கட்டி காப்பதில் விருப்பம் உடையவர்கள் என்றும் கூறப்படுகிறது. நண்டுகள் மிகவும் எச்சரிக்கை உடையவை, இதனால் கடக ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கை உணர்வு கொண்டவர்கள்  என்றும், யாரையும் முழுமையாக நம்ப மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.  பாசம் என்றால் என்னவென்று இவர்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.
    !!!! வாழ்க வளமுடன்!!!