RASI URUVAM

  •    > Details
  • சிம்ம ராசியின் உருவம்


    ராசிகளின் குணாதிசயங்களை எளிதில் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காக  ஜோதிடத்தில் ராசி உருவங்கள் ஒருவகையான  சங்கேத குறியீடுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக, மேஷ ராசியின் குணாதிசியங்கள் ஆடுகளின் குணாதிசயங்களை ஒத்தி இருக்கும். இதுபோல் அந்தந்த ராசியின் குணாதிசயங்கள் அந்தந்த ராசிக்குரிய உருவத்திற்குள்  மறைந்து இருக்கிறது.

    சிம்ம ராசியின் உருவம்
    சிம்ம ராசியின் உருவம் சிங்கமாகும்.  சிங்கத்திற்கு பசி எடுத்தால் மட்டுமே பிற மிருகங்களை வேட்டையாடும்.  மற்ற நேரங்களில் பிற மிருகங்களை வேட்டையாடுவதில்லை. இவன் காரணத்தினால், சிம்ம ராசிக்காரர்கள் அவசியம் கருதி செயல்படுவார்கள் என கூறப்படுகிறது.  சிங்கங்கள் எப்பொழுதும் ஓய்வாக, எதைப்பற்றியும் கவலையில்லாதது போல் நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும்.  இதனால் சிம்ம ராசிக்காரர்கள் எந்த ஒரு விஷயத்தையும் பெரியதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும், எப்பொழுதும் ஓய்வாகவே இருக்க விரும்புவார்கள் என்றும் கூறப்படுகிறது. சிங்கங்கள் எப்பொழுதும் தங்கள் எல்லைக்குள் பிறர் நுழைவதை விரும்புவதில்லை.  இதனால் சிம்ம ராசிக்காரர்கள் தனியாகவே இருக்க விரும்புவார்கள் என்றும், தங்கள் சுதந்திரத்தில் பிறர் தலையிடுவதை விரும்புவதில்லை என்றும் கூறப்படுகிறது. சிங்கம் விலங்குகளின் அரசன் போல் விளங்குவதால், சிம்மராசிக்காரர்கள் தங்களை எப்பொழுதும் ஒரு தலைவனாகவே காட்டிக் கொள்ள விரும்புவார்கள் என கூறப்படுகிறது.
    !!! வாழ்க வளமுடன்!!!