ராசிகளின் குணாதிசயங்களை எளிதில் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காக ஜோதிடத்தில் ராசி உருவங்கள் ஒருவகையான சங்கேத குறியீடுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக, மேஷ ராசியின் குணாதிசியங்கள் ஆடுகளின் குணாதிசயங்களை ஒத்தி இருக்கும். இதுபோல் அந்தந்த ராசியின் குணாதிசயங்கள் அந்தந்த ராசிக்குரிய உருவத்திற்குள் மறைந்திருக்கிறது.
தனுசு ராசியின் உருவம்
தனுசு ராசியின் உருவம் பாதி குதிரையும் பாதி மனிதனுமாக வில்லேந்திய உருவமாகும். இந்த ராசியின் உருவம் பாதி மிருகமாகவும் பாதி மனிதனாகவும் காட்டப்பட்டுள்ளதால் இந்த ராசிக்காரர்கள் தங்களுடைய மிருகக் குணங்களிலிருந்து விடுபட்டு மனிதத்தன்மையை வளர்த்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். முடிந்தவரை தங்கள் குறைகளை திருத்திக் கொள்வதற்கு தயாராகவே இருப்பார்கள். இந்த ராசி உருவம் வில்லேந்தி குறி பார்ப்பது போல் உள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையை ஒரு லட்சியத்துடனே நடத்திச் செல்வார்கள் என கூறப்படுகிறது. மன ஒருமைப்பாடு இருந்தால் மட்டுமே வில்வீரன் சரியாக குறி பார்க்க முடியும். இதன் காரணத்தால் தனுசு ராசிக்காரர்கள் இயற்கையாகவே மன ஒருமைப்பாடு உடையவர்களாக இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. இவர்களுக்கு உள்ளுணர்வு அதிகமாகவே இருக்கும். தர்மத்தை நிலை நாட்ட ஸ்ரீ ராமன் வில்லேந்தி நான் என்பார். இதனால் வில் தர்மத்தின் குறியீடாக கருதப்படுகிறது. தனுசு ராசிக்காரர்கள் தர்மத்திற்காக போராடுவார்கள்.
!!! வாழ்க வளமுடன்!!!