வணக்கம் அன்பர்களே காதல் மணித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று. இப்படிபட்ட காதல் நம் ஜாதகத்தில் காதலிக்கப்பட் பெண் நமக்கு மனைவியாக வருவார்களா,அமையுமா என்று ஏங்கி தவிக்கிறார்கள். நம் ஜாதகத்தில் நம்பாவ புத்திநாதனே காதலிக்க காரணமாகின்றார்.இந்த 5ம்பாவ புத்திநாதன் 7ம்பாவத்தோடு தொடர்பு பெற்றிருந்தால் காதலித்த பென்னேயே திருமணம் செய்வார்கள்.
5ம்பாவம் 6ம்பாவத்தோடு மட்டுமே தொடர்பு பெற்றிருந்தால் இவர்களின் காதலில் எந்த ஒரு தடையும் இருக்காது. ஆனால் இவர்கள் எத்தனை வருடம் காதலித்தாலும் இவர்கள் காதல் திருமணத்தில் போய் முடியாது. அதேபோல் 5ம்பாவபுத்திநாதன் 8ம்பாவத்தோடு தொடர்பு பெற்றிருந்தால் காதல் முலம் அசிங்கம், அவமானம் ஏற்படும். அல்லது காரணம் காரியமின்றி காதல் இடையிலேயே கட்டாகி விடும்.
அதே போல் ஆணாக இருந்தாலும், பெண்னாக இருந்தாலும் பலகாதல் புரிவார்கள் அது அவர்களின் விதி கொடுப்பினையே.அதே போல் காதல் செய்வார்கள் ஆனால் காதலில் சுயநலவாதிகளாக இருப்பார்கள். காதலிப்பார்கள் ஆனால் வீட்டில் காதலிப்பவரை விட நல்ல மாப்பிள்ளையாக இருந்தால் காதலித்தவனை மறு கணம் துக்கி எரிந்து விடுவார்கள். எதுவுமே நடக்காதது போல் இருப்பார்கள் இதுவும் அவர்களின் லக்கின கொடுப்பினைகள், 5ம் பாவ கொடுப்பினைகள் ஆகும்.