MARRIAGE-MARRIAGE MATCHING PREDICTIONS

  • Home    >
  • MARRIAGE-MARRIAGE MATCHING PREDICTIONS
blog_img

வணக்கம் அன்பர்களே திருமணபொருத்தம் வாழ்க்கையில் முக்கியமான ஒன்று நாம் அடுத்தநிலைக்கு செல்வது இந்த திருமணபந்ததில்தான். திருமண பொருத்தம் பார்க்கும் போது ஆண் - பெண் இருவரின் பிற்தஊர், பிறந்ததேதி, பிறந்த நேரம் இவைகளை வைத்து பொருத்தங்கள் பார்ப்பது சிறப்பு. பொருத்தங்கல் பார்க்கப்படும்போது பிறந்த ராசியில் உள்ள நட்ச்சத்திரத்தை வைத்து 10க்கு எத்தனை பொருத்தம் உள்ளது என்பதை மட்டும் பார்த்து திருமணத்தை முடிக்ககூடாது. இருவருடைய லக்கனம்,ஜாதக அமைப்புகள் வைத்து பொருத்தம் பார்ப்பது இன்னும் ஒருபடிக்குமேல்.

கே.பி.முறையில் திருமண பொருத்தம் பார்க்கும் போது லக்கினகொடுப்பினைகள் இருவருக்கும் சிறப்பாக உள்ளதா,7ம்பாவ கொடுப்பினைகள் இருவருக்கும் சிறப்பாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.நடப்பு திசைகள் இருவருக்கும் சிறப்பாக உள்ளதா, ஆணுக்கு 8க்குறிய நட்சத்திரத்தில் பெண் பிற்துள்ளதா, பெண்ணிற்குரிய 8ம்பாவ நட்சத்திரத்தில் ஆண் பெறந்துள்ளார என்பதை பார்க்க வேண்டும்.

மேலும் திருமணம் வரன் பார்க்க ஆரம்பிக்கும் போது வரணுக்கு எப்போது திருமணம் நடைபெறும்,வரும்வரன் எந்ததிசையில் இருந்துவருவார்,வரும் வரன் வீட்டிற்கு எத்தனாவது வரன் அமையும். வரும் வரன் அவருடைய அங்க அடையாளங்கள், எப்படி பட்டவரன் அமையும், கல்விதகுதி என்ன,வரும் வரன் பொருளாதாரத்தில் எப்படி இருப்பார்.

கூட்டுகுடுப்பத்தில் இருக்ககூடியவரா தனிகுடித்தனமா,வரனின்வீடு அமைப்பு எப்படி இருக்கும், பிறந்த ஊரிலா, பக்கத்து ஊரிலா,எப்படி வரன் அமையும். தன்ஜாதியில் அமையுமா அல்லது நம்ஜாதியில்உட்பிரிவில் அமையுமா, அல்லது வேறுஜாதியில் அமையுமா. வரனின் பெயர் ஆரம்ப எழுத்து என்ன, முதல் தாரமா இரண்டாம் தாரமா, அல்லது வரனுக்கு இருதார யோகமுடையவரா என்பதை தெளிவாக பார்த்து வரன் அமைத்து கொள்வது சிறப்பாகும்.

மேலும் கே.பி.முறையில் திருமணபொருத்தம்

  •  1-ஜாதகரின் குனநலன்கள்
  •  2- தனநிலை பெருக்கங்கள்
  •  3- தைரியம், தன்னம்பிக்கை
  •  4-எதிர்கால சொத்து சேர்க்கை
  •  5-புத்திரபாக்கிய நிலை
  •  6- வேலை வாய்ப்பு,உடல் ஆரோக்கிய நிலை
  •  7-திருமணம் வாழ்க்கை, கணவன்- மனைவி ஒற்றுமை, ஒருதாரமா இருதாரமா
  •  8- கணவன்-மனைவின் ஆயுள்நிலை
  •  9-உயர்கல்வி நிலை,புதிய மாற்றங்கள், பாக்கியம் பெறுவது
  •  10- கணவன்- மனைவி கொளரவ நிலை,மரியாதைகள்
  •  11 - கனவன்-மனைவி ஆசைபூர்த்திகள்,சந்தோசமான நிறைவான மனநிலை
  •  12 -கனவன்-மனைவி முலதனங்கள் இருவரின் ரகசிங்கள். இவைகளை கே.பி.முறையில் பொருத்தங்கள் பார்க்கபடிகிறது.