நீயூமராலஜி என்பது பலமுறையில் பார்க்கப்படுகிறது. நாம் பிறந்தேதியை வைத்தும், பிறந்ததேதி,மாதம்,வருடம் இவைகளைவைத்தும் நீயூமராலஜி பார்க்கப்படுகிறது. இவைகளை வைத்து நீயூமராலஜி பார்க்கும் போது அன்றய தேதியில் பல ஊர்களில் பலாயிரம் குழந்தைகள் பிறந்திருக்கும். அப்படி பிறக்கப்பட்ட குழந்தைகளுக்கு பிறந்ததேதியை வைத்து குழந்தைக்கு பெயர்வைத்தல்,புதிய தொழில் துவங்குவதற்கு பிறந்த தேதியை எடுத்து வைத்தல் சறியாக வரும் என்றால் இவை பொதுபலன்கள் போலவே இருக்கும்.
நாம் பிறந்ததேதி,பிறந்தநேரம், பிறந்தஊர் இவைகளை வைத்து பார்க்கும் போது அந்த தேதியில் பல ஊர்களில் பலாயிரம் குழந்தைகள் பிறந்திருந்தாலும் நாம் பார்க்க கூடிய ஜாதகம் தனிதன்மை வாய்ந்தது என்பதால் அந்த குழந்தையின் 3ம்பாவ புத்திநாதன் யார், புத்திநாதன் நின்ற நட்ச்சத்திரம் யார்', உபநட்ச்சத்திரம் யார், இவர்களின் பாவமுனை தொடர்புகள் சிறப்பாக உள்ளதா, அப்படி பெயர் எடுத்து வைக்கும்போது அந்த பெயர் வளர்ச்சியடையுமா, அந்த குழந்தையின் பெயரால் பெயர்புகழ் அடையுமா, என்பதை பார்த்து வைக்கும்போது அந்த குழந்தை அவப்பெயரோ,கெட்டபெயரோ எடுக்காமல் இருக்கும்.
நாம் ஒரு தொழில் துவங்குவதற்கு பெயர் வைக்கும்போது அந்த ஜாதகரின் 10ம்பாவ புத்திநாதன் யார்,புத்திநாதன் நின்ற நட்ச்சத்திரம் யார்,உபநட்ச்சத்திரம் யார் என்று தனிமனிதனுடைய ஜாதகத்தை பார்த்து வைப்பது சிறப்பாகும். கூட்டு தொழில் என்றால் எத்தனை நபரோ அத்தனை நபர்களின் ஜாதகத்தை வைத்து ஒரு பெயர் எடுக்கும் போது அனைவருக்கும் நல்லவிதமாக பொருந்தகூடிய பெயர் எடுத்து வைக்க சிறப்பாக இருக்கும்.சிலர் பொதுவான தெய்வத்தின் பெயரிலோ, அல்லது கூட்டு என்னின்படி 46ல் வைத்தால் நன்றாக இருக்கும் என்றும் அதன்பலன்கள் சிறப்பாக உள்ளது என்றும் தோராயமாக வைத்து கொள்வார்கள். 46 என்பது கூட்டினால் 1 வரும் அதாவது சூரியனை குறிக்கும். அந்த சூரியன் பாவமுனை தொடர்பில் 8ம்பாவ புத்திநாதனாக இருந்தால் பெயர்வைத்த அடுத்தகனநொடியே அந்த விலாசபெயர் சிக்கலில் மாட்டுவது, அந்த கம்பெனியை வெளியில் தப்பான விமர்ச்சனங்கள் வருவது, அந்த விலாசத்தில் வியபாரம்பெருக்கம் இல்லாமல் இருப்பது இதுபோன்ற பலபிரச்சனைகள் இருப்பதால் முறையாக பெயர் அமைத்து கொள்வது சிறப்பாகும்.